Tuesday, August 16, 2016

பொன்மொழிகள் Sayings

பொன்மொழிகள்

1. அதிகம் பேசாதவனை உலகம் அதிகம் விரும்புகிறது. அளந்து பேசுபவனை அதிகம் மதிக்கிறது. அதிகம் செயல்படுபவனையே கைகூப்பித் தொழுகிறது.

2. கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

3. ந‌ம்மு‌ட‌ன் வா‌ழ்வோரை‌ப் பு‌ரி‌ந்து கொ‌ள்வத‌ற்கு ந‌ம்மை முத‌லி‌ல் பு‌ரி‌ந்து கொ‌ள்ள வே‌ண்டு‌ம்.

4. ந‌ம்‌பி‌க்கை குறையு‌ம் போது ஒ‌வ்வொரு ம‌னிதனு‌ம் நெ‌றிய‌ற்ற கொ‌ள்கையை மே‌ற்கொ‌ள்‌கிறா‌ன்.

5. சலித்துக் கொள்பவன் ஒவ்வொரு வாய்ப்பிலும் உள்ள ஆபத்தைப் பார்க்கிறான். சாதிப்பவன் ஒவ்வொரு ஆபத்திலும் உள்ள வாய்ப்பினைப் பார்க்கிறான்.

6. ம‌கி‌ழ்‌ச்‌சி எ‌ன்ற உண‌ர்‌ச்‌சி ம‌ட்டு‌ம் இ‌ல்லா‌‌வி‌ட்டா‌ல் வா‌ழ்‌க்கை எ‌ன்பது சும‌க்க முடியாத பெ‌ரிய சுமையா‌கி‌யிரு‌க்கு‌ம்.

7. உலகம் ஒரு விசித்திரமான கல்லூரி. இங்கே பாடம் சொல்லிக்கொடுத்துத் தேர்வு வைப்பது இல்லை. தேர்வு வைத்த பிறகே பாடம் கற்பிக்கப்படுகிறது.

8. சிக்கனம் என்பது ஒருவன் பணத்தை எவ்வளவு குறைவாகச் செலவு செய்கிறான் என்பதைப் பொறுத்தது அல்ல. அதை அவன் எவ்வளவு உபயோகமாகச் செலவிடுகிறான் என்பதைப் பொறுத்தது ஆகும்.

9. எதை இழந்தீர்கள் என்பதல்ல முக்கியம், என்ன மிச்சம் இருக்கிறது என்பதே முக்கியம்.

10. அரிய சாதனைகள் அனைத்தும் வலிமையினால் செய்யப்பட்டவை அல்ல; விடாமுயற்சியினால் தான்.

11. முன்நோக்கி செல்லும் போது கனிவாயிரு. ஒருவேளை பின்நோக்கி வரநேரிட்டால் யாராவது உதவுவார்கள்.

12. ரகசியத்தை வெளிப்படுத்தியவனுக்கும், துக்கத்தை வெளிப்படுத்தாதவனுக்கும் மனதில் நிம்மதி இருக்காது.

13. எல்லோரையும் நம்புவது அபாயகரமானது. ஒருவரையும் நம்பாமல் இருப்பது இன்னும் அபாயகரமானது.

14. எல்லாத் துன்பங்களுக்கும் இரண்டு மருந்துகள் உள்ளன. ஒன்று காலம், இன்னொன்று மெளனம்.

15. எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்.

16. ஆசையில்லாத முயற்சியால் பயனில்லை. முயற்சியில்லாத ஆசையால் பயனில்லை.

17. செயல் புரியாத மனிதனுக்கு தெய்வம் ஒருபோதும் உதவி செய்யாது.

18. சண்டைக்குப் பின் வரும் சமாதானத்தைவிட, என்றும் சண்டையே இல்லாத சமாதானம்தான். வேண்டும்.

19. நேற்றைய பொழுதும் நிஜமில்லை; நாளைய பொழுதும் நிச்சயமில்லை; இன்றைக்கு மட்டுமே நம் கையில்.

20. மகிழ்ச்சியாய் நீ வீணாக்கிய தருணங்களெல்லாம் வீணானவையல்ல.

21. பழமையைப் பற்றி ஒன்றுமே தெரியாமல் புதுமையைச் சிறப்பாகப் படைக்க முடியாது.

22. வாசிப்புப் பழக்கம் என்பது அருமையான ருசி, அழகான பசி. ஒரு முறை சுவைக்கப் பழகிவிட்டால் அது தொடர்ந்து வரும்.

23. நீங்க‌ள் விரும்புவ‌து ஒருவேளை உங்க‌ளுக்கு கிடைக்காம‌ல் போக‌லாம். ஆனால் உங்க‌ளுக்கு த‌குதியான‌து உங்க‌ளுக்கு க‌ண்டிப்பாக‌ கிடைத்தே தீரும்.

24. அறிவு ஒன்றுதான் அச்சத்தை முறிக்கும் அரிய மருந்து. அறிவை வளர்த்துக் கொண்டால் எல்லாவிதமான பயங்களும் அகன்றுவிடும்.

25. தவறு நேர்ந்து விடுமோ என்று அஞ்சி அஞ்சி எந்த செயலையும் செய்யாமல் பின் வாங்குவது இழிவானது.

Sunday, August 14, 2016

7

7 க்கு இவ்வளவு பெருமை.  எண் ஏழின் சிறப்புக்கள்:

எண் ஏழு (Number 7) பெருமை

இன்று இணையத்தில் உலாவும் போது கண்ணில் பட்ட தகவல் இது.

உங்களிடம் பகிர்த்துக் கொள்வதில் மகிழ்ச்சி:

ஏழு என்பது, வேத மரபில் ஒரு முக்கிய எண்.

ஏழு என்பதற்கு முழுமை அல்லது பரிபூரணம் என பொருள்படும்.

ஏழு என்பது இந்தியப் பண்பாட்டில் சிறப்பிடம் பெற்ற எண் ஆகும்.

காலத்தைக் கணிக்கும் முறையில் எண் ஏழு பழங்காலமக்களிடையே மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்துள்ளது.

ஏழு என்பது தமிழ் எண்களில் '௭' என்று குறிக்கபடுகிறது.

எண் ஏழின் சிறப்புக்கள்:

1. புதிய உலக அதிசயங்கள் மொத்தம் ஏழு, இது அறிவிக்கப்பட்ட தேதி 07/07/2007

2. எழு குன்றுகளின் நகரம் ரோம்

3. வாரத்திற்குமொத்தம் ஏழு நாட்கள்

4. மொத்தம் ஏழு பிறவி

5. ஏழு சொர்க்கம்(குரான்)

6. ஏழு கடல்கள்
'கடுகைத் துளைத்தேழ் கடலைப் புகுத்தி குறுகத் தெரித்த குறள்' - ஒளவையார்.

7. வானவில்லின் நிறங்கள் (VIBGYOR)

8. ஏழு வானங்கள். (Qur'an)

9. ஏழு முனிவர்கள் (Rishi)

10. ஏழு ஸ்வரங்கள் (ச,ரி,க,ம,ப,த,நி)

11. ஏழு கண்டங்கள் (Europe, Asia, Africa, North America, South America, Australia, and Antarctica)

12. ஆதி மனிதன் Adam மற்றும் Eve ஆகியோரின் பெயர்களில் உள்ள மொத்த எழுத்துக்களின் கூட்டுத்தொகையின்
எண்ணிக்கை ஏழு

13. ஒவ்வொரு திருகுறளிலும் உள்ள சீர்கள் ஏழு. அதுமட்டுமா, ஒன்றே முக்கால் அடிக் குறளைக் காற் காற் பகுதியாக வெட்டிப் பாருங்கள் அதுவும் ஏழுபகுதிகளாக வரும்.

14. கண்ணுக்கு புலப்படக் கூடிய கோள்களின் எண்ணிக்கை ஏழு (Sun, Moon, Mercury, Mars, Jupiter, Venus and Saturn)

15. திருக்குறளில் மொத்தம் 1330 குறட்கள், 133 அதிகாரங்கள் உள்ளன. அதனுடைய கூட்டுத்தொகையும் ஏழு.

16. மேலுலகம் ஏழு

17. கீழுலகம் ஏழு
நுண்ணறிவாய் உலகாய் உலகு ஏழுக்கும்
எண்ணறிவாய் நின்ற எந்தை பிரான் தன்னைப்
பண் அறிவாளனைப் பாவித்த மாந்தரை
விண் அறிவாளர் விரும்புகின்றாரே - திருமூலர் பாடல்

18. திருக்குறளில் "கோடி' என்ற சொல் ஏழு இடங்களில் இடம்பெற்றுள்ளது

19. மொத்தம் ஏழு தாதுக்கள்

20. ஏழு செவ்விய போரியல் நூல்கள் - சீனா

21. ஏழானது மிகப்பெரிய ஓரிலக்கா பகா எண் (Prime Number) ஆகும்.

22. ஏழு புண்ணிய நதிகள்

23. இராமாயணத்திலுள்ள மொத்த காண்டங்களின் எண்ணிக்கை ஏழு

24. அகப்பொருள் திணைகள் ஏழு

25. புறப்பொருள் திணைகள் ஏழு

26. சூரிய பகவானின் ரதத்திலுள்ள குதிரைகளின் எண்ணிக்கை ஏழு

27. கடை ஏழு வள்ளல்கள்

28. சப்த நாடி (சமஸ்கிருதத்தில் சப்த என்றால் ஏழு)

29. "திருவள்ளுவர்" - எழுத்துக்களின் கூட்டுத்தொகையும் ஏழுதான்

30. ஏழு அதிர்ஷ்ட தெய்வங்கள் - ஜப்பான்

31. ஏழு மலையான் - திருப்பதி, ஆந்திரா

32. மனிதனுடைய தலையிலுள்ள ஓட்டைகளின் எண்ணிக்கை ஏழு

33. உடலை கட்டுப்படுதும் சக்கரங்கள் ஏழு.

34. பெண்களின் பல்வேறு பருவங்கள் ஏழு (பேதை,பெதும்பை,மங்கை,மடந்தை,அரிவை,தெரிவை,
பேரிளம் பெண்)

Thursday, August 11, 2016

கணிதம்

உங்கள் குழந்தைகளின் முன்னேற்றத்திற்கு

கணிதத்தில் சிறந்து விளங்க இதோ பயனுள்ள இணைய தளங்கள்

வெற்றி நிச்சயம்.

பயன்படுத்தி பலனடையுங்கள்

கணிதம் கற்க சிறந்த 10 தளங்கள்

1 . http://www.homeschoolmath.net      

தரம் 1 தொடக்கம் 8 வரையான மாணவரகள் கணித படத்தினை கற்று கொள்ள உதவுகிறது இந்த தளம்.

இந்த தளத்தில் கணித செயல்முறைகள்,
வீடியோ என பலவற்றை உள்ளடக்கியுள்ளது;

2. https://m.mathway.com

கணித பாடம் தொடர்பான வினாக்களுக்கு முழுமையான செயல்முறை விளக்கத்துடன் தருகிறது இந்த தளம்.

3. http://www.webmath.com

கணித பாடம் தொடர்பான வினாக்கள் , பிரச்சனைகளுக்கு செயல் முறை விளக்கங்களுடன் பதில் பெற உதவுகிறது.

4.    http://m.wolframalpha.com


கணித பாடம் மட்டுமல்லாது அறிவியல் பொது அறிவு வினாக்களுக்கும் விடை பெறலாம் இந்த தளத்தில்.

5 . http://pedagonet.com

கணித தந்திரோபாயங்களை கற்றுகொள்ள உதவுகிறது இந்த தளம்.

6. https://www.mathsisfun.com

https://www.mathsisfun.com/puzzles/

மாணவர்களுக்கு விளையாட்டுக்கள் மற்றும் புதிர்கள் மூலம் கணித பாடத்தினை கற்க உதவுகிறது இந்த தளம்.

7. http://m.coolmath-games.com

மாணவர்களுக்கு விளையாட்டுக்கள் மற்றும் புதிர்கள் மூலம் கணித பாடத்தினை கற்க உதவுகிறது இந்த தளம்.

8. http://www.freemathhelp.com

http://www.freemathhelp.com/algebra-help.html

கணித பாட விளக்கங்கள் மற்றும் செயல் முறை பயிற்சிகளை உள்ளடக்கியது.

9 . http://math.com

கணித பாட அலகுகள் ரீதியாக விளக்கங்கள் , செயல்முறைகள், பயிற்சிகளை உள்ளடக்கியுள்ளது.

10 .  https://www.khanacademy.org

கணிதம் மற்றும் அறிவியல் விளங்கங்களை வீடியோ மூலம் இந்த தளத்தில் கற்றுகொள்ள முடியும

Tuesday, June 7, 2016

உத்தம குரு

உத்தம  குரு

இறையருள் பெற நாம் எண்ணும்போதே,
இறையருளால் உத்தம  குருவும்  வருவார்!
நாம்  நாடித் தேடிச் சென்றிடும்  முன்பே,
நம்மைத் தேடி வந்து விடுவார் அவரே!

உத்தம குரு  வெறும் மனிதர் அல்ல,
இறையே அந்த குரு  வடிவு எடுக்கும்!
உத்தம குருவும் இறையும் ஒன்றென
விரைவில் நாம் விளங்கிக்  கொள்வோம்.

மந்திரங்கள்  காதுகளில் உபதேசிப்பார்;
மனதில் வைராக்கியத்தை  வளர்ப்பார்;
அறிவில் விவேகம்தனை விதைப்பார்;
ஆன்மாவில் நாட்டம் கொள்ளச் செய்வார்.

ஜீவாத்மாவையும், அது அலைந்து  தேடிடும்
பரமாத்மாவையும், குரு  சேர்த்து  வைப்பார்;
பார்வை  அற்றவனுக்கு  வழி காட்டுவது போல,
நேர்மை மாறாத  நல்வழியில்  நம்மை நடத்துவார்.

கங்கையைப் போலப் புனிதமானவர் குரு;
விந்தைகள் பலப்பல புரிய வல்லவர் குரு;
நிந்தனையால்  அவர் உள்ளம் மாறுபடார்;
சிந்தனைச் சிற்பி என்பவரே நல்ல குரு.

மூன்று வகை வைத்தியர்கள் உண்டு;
மூன்று வகையினர்  குருவும் ஆவர்.
அதமம், மத்யமம்,  உத்தமம்  என நாம்,
அறியும் வகைகள் உண்டு இரண்டிலும்.

முதல் வகை வைத்தியர், நாடியைச் சோதித்து,
மருந்தை அளித்து விட்டுச்  சென்று விடுவார்.
முதல் வகை குரு நல்ல முறையில்  போதித்து,
“மகனே! இனி  உன் சமர்த்து!” என்றிடுவார்.

இரண்டாம் வகை  வைத்தியர் மருந்தை,
வற்புறுத்தி, வலியுறுத்தி உண்ண வைப்பார்.
இரண்டாம் வகை குரு, இனிய  சொற்களால்,
வற்புறுத்தி, நம்மை நல்வழிப்படுத்துவார்.

அடுத்த வகை வைத்தியர் நம்மை, “பாடு
படுத்தி”யேனும் மருந்தைச் செலுத்துவார்.
பலப்பிரயோகம்  செய்தேனும்  நம்மை,
நலம்பட வாழ்விப்பவரே ஒரு உத்தம குரு.

குருவருளும், இறைஅருளும் ஒன்றாய்க்
கூடி வரும்போது,  நம் உலக  வாழ்வில்
குறை இன்றிக் கோரினவை கைக்கூடும்.
குருவை வரவேற்கத்   தயாராகுங்கள்!

Tuesday, May 31, 2016

பாலியல் கல்வி / செக்ஸ் கல்வி

*உங்கள் குழந்தைக்கு செக்ஸ் தெரியுமா?*-சமஸ்

         கவனமாகப் படியுங்கள். உலகிலேயே அற்புதமான கலாசாரத்துக்குச் சொந்தக்காரர்கள் என்று சொல்லிக்கொள்ளும் இந்தியாவின் உண்மையான முகத்தைத் தரிசிக்க உதவும் புள்ளிவிவரங்கள் இவை.

* உலகிலேயே அதிகமான எண்ணிக்கையில் 53 சதவிகிதம் குழந்தைகள் - அதாவது இரண்டில் ஒரு குழந்தை - பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்படும் நாடு இந்தியா.

* இவற்றில் 89 சதவிகிதம் குற்றங்கள் உறவினர்கள், நண்பர்கள் என நன்கு அறிமுகமானவர்களாலேயே நடத்தப்படுகின்றன.

* இப்படி வன்முறைக்கு உள்ளாக்கப்படும் குழந்தைகளில் 87 சதவிகிதம் பேர் மீது மீண்டும் மீண்டும் வன்முறை தொடர்கிறது.

* இவர்களில் 5-12 வயதுக்குள் வன்முறைக்கு உள்ளாக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை 42.06 சதவிகிதம்.

* இப்படி வன்முறைக்கு உள்ளாக்கப்படுபவர்களில் பெண் குழந்தைகளைவிட ஆண் குழந்தைகளின் எண்ணிக்கை 6 சதவிகிதம் அதிகம்.

* இந்தியாவில் 20] நிமிடங்களுக்கு ஒரு பெண் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்படுகிறாள்.

      டெல்லியில் ஓடும் பஸ்ஸில் மாணவி ஐந்து பேரால் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டு, கொல்லப்பட்ட சம்பவம் ஆகட்டும், குவாஹாத்தியில் சாலையில் பலர் முன்னிலையில் ஓட ஓட ஓர் இளம்பெண் மானபங்கப்படுத்தப்பட்ட சம்பவம் ஆகட்டும். முக்கியமான ஒரு செய்தியை நமக்குத் திரும்பத் திரும்ப உணர்த்துகின்றன... இனியும் இந்த நாட்டில் அரசாங்க அமைப்புகளை நம்பிப் பயன் இல்லை. நம் குழந்தைகளைக் காத்துக்கொள்ள இனி நாம்தான் களம் இறங்கியாக வேண்டும்; குழந்தைகளுக்கான பாலியல் கல்வியை வீட்டில் இருந்தே தொடங்க வேண்டும் என்பதே அந்தச் செய்தி!
  சரி, எந்த இடத்தில் இருந்து தொடங்குவது?
     
முக்கியமான 5 கட்டளைகள்:

      *மார்பகம், பிறப்புறுப்பு, மாதவிடாய், நாப்கின், ஆணுறை, சுய இன்பம்,  உடலுறவு, கற்பு, பலாத்காரம், காதல், குழந்தைப் பிறப்பு... இப்படி எது தொடர்பாக உங்கள் குழந்தை கேட்டாலும் மறைக்காமல் அறிவியல்ரீதியிலான உண்மையைச் சொல்லுங்கள். அதேசமயம், தேவைக்கு அதிகமாக, பெரிய பெரிய விளக்கங்களோடு பதில் அளிக்க வேண்டியது இல்லை. அவர்கள் கேட்கும் கேள்விக்கு ஒரு வரியில் பதில் சொல்லப் பழகுங்கள். இப்படிப்பட்ட விஷயங்களைப் பேசும்போதோ, குழந்தைகளை விசாரிக்கும்போதோ ஒரு குற்றவாளியை அணுகுவதுபோல அவர்களின் நேருக்கு நேர் அமர்ந்து, கண்களைப் பார்த்துப் பேசுவதைத் தவிர்த்து, பக்கவாட்டில் அமர்ந்து விளையாட்டாகப் பேசுங்கள். ஆண் குழந்தைகளுக்குப் பெண் குழந்தைகளைப் பற்றியும் பெண் குழந்தைகளுக்கு ஆண் குழந்தைகளைப் பற்றியும் ஏராளமான சந்தேகங்கள் இருக்கும். இயல்பாகவே ஒருவர் மீது மற்றவருக்கு ஈர்ப்பு இருக்கும். எனவே, ஆண் குழந்தைகளுக்குப் பெண் குழந்தைகளை எப்படி அணுகுவது என்றும் பெண் குழந்தைகளுக்கு ஆண் குழந்தைகளை எப்படி அணுகுவது என்றும் சொல்லிக்கொடுங்கள்.

      * வீட்டில் அரைகுறை ஆடையோடு உலவாதீர்கள். கணவன் - மனைவி நெருக்கத்தைக் குழந்தையின் முன் காட்டாதீர்கள். குழந்தையின் முன் உடை மாற்றாதீர்கள். ஆபாசம் வரும் எனத் தெரிந்தால், டிவியோ, பத்திரிகையோ குழந்தை முன் பார்க்காதீர்கள்.
     
 * பாலியல் கல்வியின் அடிப்படையே வீட்டிலிருந்து, பாலியல் சமத்துவத்தில் இருந்துதான் தொடங்குகிறது. எனவே, ஆண் - பெண் பாகுபாடு எந்த விதத்திலும் வீட்டில் நிலவாத சூழலை உருவாக்குங்கள். சமையலில் தொடங்கி முக்கியமான முடிவுகளை எடுப்பது வரை எல்லா விஷயங்களிலும் கணவன் - மனைவி  இருவருக்கும் சமமான பங்கு இருப்பதை உறுதிசெய்யுங்கள். ஆண் குழந்தைகளுக்குப் பெண் குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுக்கும் எல்லா வேலைகளையும் கற்றுக்கொடுங்கள்; பெண் குழந்தைகளுக்கு ஆண் குழந்தைகளுக்குக் கொடுக்கும் எல்லா வாய்ப்புகளையும் அளியுங்கள்.

      * சக நண்பராக குழந்தைகளோடு நெருக்கமாக உரையாடுங்கள். தினமும் குறைந்தது ஒரு மணி நேரமேனும் அவர்களோடு செலவிடுங்கள். அவர்களுடைய நண்பர்கள், விருப்பங்கள், செயல்பாடுகள்பற்றிப் பேசித் தெரிந்துகொள்ளுங்கள். குழந்தைகளிடம் பிறப்புறுப்புபற்றி சகஜமாகப் பேசுங்கள். கை, கால்களைப் போல அதுவும் ஓர் உறுப்புதான் என்று அவர்களுக்கு உணர்த்துங்கள். அதைப் பற்றிப் பேசவோ, சந்தேகம் கேட்கவோ அவர்கள் தயங்காத சூழலை உருவாக்குங்கள். புத்தக வாசிப்புப் பழக்கத்தை உருவாக்குங்கள். நீங்கள் சொல்ல நினைக்கும் - ஆனால், சொல்ல முடியாதது என்று நினைக்கும் - விஷயங்களைப் புத்தகங்களாக வாங்கிக் கொடுத்துப் படிக்கச் சொல்லுங்கள்.

      * குழந்தைகள் எந்த ஒரு சங்கடமான விஷயத்தை உங்கள் முன் கொண்டுவந்தாலும் ‘‘பயப்பட வேண்டாம், இது ஒரு பிரச்னையே இல்லை, நான் இருக்கிறேன்’’ என்கிற பக்கபல வார்த்தைகளோடு அவர்களை அணுகுங்கள்.

*அதிகம் கேட்கப்படும் 5 கேள்விகளும் சொல்ல வேண்டிய பதில்களும்*!

‘‘அம்மா, என்கூட படிக்குற ஒரு பையன் என்கிட்ட வந்து காதலிக்கிறேன்னு சொல்றாம்மா...”
‘‘ஆஹா... அவனுக்கு உன்னைப் பிடிச்சுருக்குபோல இருக்குடா. உன்கூட ஃப்ரெண்டா இருக்க ஆசைப்பட்டு இருக்கான். அதை அவனுக்குச் சொல்லத் தெரியலை. டி.வி., சினிமாவைப் பார்த்து காதல்னு சொல்லி இருக்கான். தப்பில்லே. அவன்கிட்டே சொல்லு. நம்ம ரெண்டு பேரும் நல்ல ஃப்ரெண்ட்ஸா இருந்து படிப்போம்னு. ஞாயிற்றுக் கிழமைல வீட்டுக்கு அழைச்சுக்கிட்டு வா. விளையாடு!’’

‘‘ஏம்மா, பெண்களுக்கு மட்டும் மார்பு வளருது... ஆண்களுக்கு வளரலை?”
‘‘பிற்காலத்துல குழந்தைங்க பிறக்கும்போது, அந்தக் குழந்தைங்களுக்குப் பால் கொடுக்கணும் இல்லையா? அதுக்காகத்தான் பெண்களுக்கு மார்பு பெரிசா வளருது.’’

‘‘பலாத்காரம்னா என்னப்பா?”
‘‘கண்ணா, நம்ம உடம்புல சில இடங்களை எல்லோரும் தொடலாம், சில இடங்களைத் தொடக் கூடாது. அப்படித் தொடக் கூடாத இடங்களை நம்மளை மீறித் தொட்டுடறதைத்தான் பலாத்காரம்னு சொல்றாங்க.’’

‘‘மாதவிடாய்னா என்னம்மா? அக்காவுக்கு நாப்கின் எதுக்கு  வாங்குறீங்க?”
‘‘உடம்புக்குத் தேவை இல்லாத தண்ணீர் எப்படி உச்சாவா வருதோ, அதேபோல, பெண்களுக்கு மட்டும் அவங்க பெரிய பிள்ளையா வளர ஆரம்பிச்ச உடனே தேவையில்லாத ரத்தம் வெளியே வரும். அதைத்தான் மாதவிடாய்னு சொல்வாங்க. அப்படி வரும்போது, அந்த ரத்தம் டிரஸ்ல பட்டுடாம இருக்கத்தான் நாப்கின்.’’

‘‘குழந்தை எப்படிப்பா பிறக்குது?”
‘‘அப்பாக்கிட்ட ஒரு கெமிக்கல் இருக்கும். அது அம்மா வயித்துக்குள்ள இருக்குற கெமிக்கல்கிட்டே போய் சேர்ந்து, பாப்பாவாப் பிறக்கும். ஏரோப்ளேன் எப்படிப் பறக்குது? அதை முழுசாச் சொன்னா உனக்கு இப்போ புரியாதுல்ல... அதுபோல, நீ பெரியவனாகும்போது இதெல்லாம் படிப்புல வரும். அப்போ உனக்கு எல்லாம் புரியும்.’’

*அணுகச் சங்கடமான 3 விஷயங்கள்!*

*குட் டச் / பேட் டச்*
     
     குழந்தைக்குக் கொஞ்சம் கொஞ்சமாக, அதன் உடலில் பிறர் எங்கெல்லாம் தொடலாம், எங்கெல்லாம் தொடக் கூடாது என்று புரியவையுங்கள். கை குலுக்கலாம் - குட் டச். தலை மேல் கை வைக்கலாம், கன்னத்தில் கையால் கிள்ளி முத்தம் கொடுக்கலாம், தோளில் கை போடலாம் - குட் டச். தடவக் கூடாது - பேட் டச். மார்பில், வயிற்றில், இடுப்பில், பிறப்புறுப்பில், தொடையில் கை வைக்கக் கூடாது; தடவக் கூடாது. வாய் மீது வாய் வைத்து முத்தம் கொடுக்கக் கூடாது. கட்டிப்பிடிக்கச் சொல்லக் கூடாது. மடியில் அமர்த்திக்கொண்டு அணைக்கக் கூடாது - பேட் டச். அப்படி யார் செய்தாலும் சம்பந்தபட்டவர்களிடம் இருந்து சமர்த்தாய் நழுவி, தனியாக இருக்கும்போது அம்மாவிடம்/அப்பாவிடம் உடனே சொல்ல வேண்டும் என்று சொல்லிக்கொடுங்கள் . வீட்டின் அருகிலோ, பள்ளிக்கூடத்தின் அருகிலோ தெரிந்தவர்கள் / தெரியாதவர்கள் யாரேனும் தங்களைத் தொடர்ந்து கவனிக்கிறார்களா, சைகை மூலம் அழைக்கிறார்களா, சம்பந்தம் இல்லாமல் பேசுகிறார்களா என்று குழந்தைகள் கவனிக்கக் கற்றுக்கொடுங்கள். அப்படிக் குழந்தை தெரிவிக்கும் நபர்களைக் கண்காணியுங்கள்.

*காதல்*

      குழந்தை ஐந்து வயதில் காதல் வயப்படலாம். இயல்புதான். பதின்பருவத்தில் காதல் வருவதும் இயல்புதான். சூசகமாகச் சொல்லுங்கள்... ‘‘வெறும் நட்புதான்பா. ஆனா, இந்த வயசுல அப்படித்தான் தோணும், தப்பில்லை. இப்படித்தான் அப்பாவுக்கும் சின்னப் புள்ளையா இருக்கும்போது நடந்துச்சு. அப்புறம் பெரியவனானதும் இதெல்லாம் சும்மான்னு புரிஞ்சுச்சு. படிப்பைக் கவனிப்பா. எதுவா இருந்தாலும் அது முக்கியம்’’ என்பதுபோலப் பேசுங்கள்.

*சுய இன்பம்*

      ஆணோ, பெண்ணோ... ஒரு குழந்தை தன் வாழ்வில் இரு முறை சுயஇன்பம் பழக்கத்துக்கு ஆட்படுகிறது. முதல் முறை 3-5 வயதில். இரண்டாவது முறை 10-13 வயதில். இது எல்லாக் குழந்தைகளுக்கும் சகஜமானது. பிறப்புறுப்பைத் தேய்த்துக்கொண்டே இருப்பதால் கிடைக்கும் சுகம் காரணமாக ஏற்படும் இந்தப் பழக்கத்தை விவரம் தெரியாத வயதில், குழந்தையின் கவனத்தைத் திசை மாற்றி நம்மால் தடுக்க முடியும். ஆனால், விவரம் தெரிந்த பின் பதின்பருவத்தில் ஏற்படும் பழக்கம் அப்படி அல்ல. அனுமதியுங்கள். அதேசமயம், டி.வி., ஆபாசப் புத்தகங்கள், இணையம் போன்ற திசை திருப்பும் விஷயங்களை வீட்டில் இருந்து அகற்றுங்கள். விளையாட்டு உள்ளிட்ட பிற விஷயங்களில் ஊக்குவியுங்கள். கவனம் சிதறும் அளவுக்குப் பழக்கம் அதிகமானால், அளவுக்கு மீறினால், அமுதமும் நஞ்சு என்பதை சூசகமாகத் தெரியப்படுத்துங்கள்.

*ஆப்த வாக்கியம்*

      ஒரு விஷயத்தைக் குழந்தைப் பருவத்தில் இருந்தே சொல்லி வளருங்கள். ‘‘நீ மட்டுமே உலகம் இல்லை. நாம் ஒவ்வொரு நாளும் உயிர் வாழ எவ்வளவோ பேருடைய உழைப்பு தேவைப்படுகிறது. ஆகையால், உன்னைப் போல் எல்லோரையும் நினை’’ என்பதைத் திரும்பத் திரும்பச் சொல்லி வளருங்கள். எல்லோருடைய எண்ணங்களுக்கும் மதிப்பு அளிக்க வேண்டும் என்பதை உணர்த்தி வளருங்கள். வாழ்வின் எல்லாக் கட்டங்களிலும் நீங்கள் அவர்களுக்குத் துணையாக இருப்பீர்கள்; எதையும் மறைக்க வேண்டியது இல்லை என்று சொல்லி வளருங்கள். அதேசமயம், எப்போதும் குழந்தைகளைக் கவனத்திலேயே வைத்திருங்கள்!