Sunday, March 29, 2015

சிற்றுரைகள்

இயற்கை அளிக்கும் வளத்தை அளவோடு ஏற்று அனுபவியுங்கள். இயற்கையும் இறைவனும் ஒன்றே. இயற்கையை பாழ்படுத்துவது பெரும்பாவம்.
* தர்மத்தை நாம் காப்பாற்றினால் தர்மம் நம்மைக் காக்கும். ஒவ்வொரு மனிதனும் தர்மவழியில் வாழத் தொடங்கினால், உலகமே நற்கதி அடைந்து விடும். 
* நம்முடைய விழிப்புணர்வே மனசாட்சி. அதைப் பின்பற்றி வாழ்பவன் தெய்வநிலைக்கு உயர்கிறான்.
* நல்ல எண்ணத்தை மனதில் வளருங்கள். நல்ல வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்துப் பேசுங்கள். நல்ல செயல்களில் ஈடுபடுங்கள். இதைவிட சிறந்த வழிபாடு ஏதுமில்லை

No comments:

Post a Comment