Wednesday, June 17, 2015

அவரைக்காய்

Image result for அவரைக்காய்மன அழுத்தம் போக்கி,இரத்தத்தைச் சுத்தப்படுத்தும் அவரைக்காயின் மகிமை..! ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே நம் முன்னோர்கள் பருவ கால சூழ்நிலைக்கேற்ப எந்த வகையான உணவுகளை சாப்பிடவேண்டும், அதை எப்படிச் சாப்பிடவேண்டும் என்பதை தெளிவாக எடுத்துக் கூறியுள்ளனர்.
மருத்துவ குணம்
அவரைக்காய் தென்னிந்தியாவில் வீடுகள்தோறும் பயிரிடப்படும் தாவரமாகும். வீட்டுத் தோட்டங்களில் வளர்க்கப்படும் அவரைக்காய் அரிய வகை மருத்துவ குணங்களை கொண்டுள்ளது.
அவரைக்காயில் பிஞ்சுக்காயே அதிக அளவில் உணவாகச் சேர்க்கப்படுகிறது. நல்ல சுவையைக் கொண்டது. எளிதில் ஜீரணமாகும் தன்மை கொண்டதால் இதன் சத்துக்கள் விரைவில் உடலில் சேரும். இதில் சுண்ணாம்புச்சத்து, வைட்டமின்கள் இருப்பதால் இளைத்த உடல் தேறும்.
உடலுக்கு வலிமை
அவரைப் பிஞ்சுகளை எடுத்து நறுக்கி அதனுடன் சின்னவெங்காயம், பூண்டு, மிளகு சேர்த்து வதக்கி உணவில் சேர்த்துக்கொண்டால் உடல் வலுப்பெறும். நோய்க்கு மருந்துண்ணும் காலங்களிலும், விரதம் இருக்கும் காலங்களிலும் அவரைக்காயை அதிகம் சேர்த்துக்கொள்ளலாம். இது உடலுக்கு வலுவைக் கொடுப்பதுடன் விரத மன அமைதியைப் பெருக்கவும் உதவும். சிந்தனையைத் தெளிவுபடுத்தும்.
பித்தத்தினால் உண்டாகும் கண்சூடு, கண்பார்வை மங்கல் போன்ற கண் பாதிப்புகளுக்கு அவரைக்காய் சிறந்த மருந்தாகும். அவரைப்பிஞ்சினை வாரம் இருமுறை சமைத்து உண்டுவந்தால் பித்தம் குறைந்து கண் நரம்புகள் குளிர்ச்சியடைந்து மங்கிய பார்வை தெளிவடையும். அவரைக்காயை அதிகம் உண்டுவந்தால் வெள்ளெழுத்து குறைபாடுகள் நீங்கும்.
ரத்தத்தை சுத்தமாக்கும்
அவரைப் பிஞ்சில் துவர்ப்புச் சுவை உள்ளதால் இது இரத்தத்தைச் சுத்தப்படுத்தும். இரத்த நாளங்களில் உள்ள கொழுப்பைக் குறைக்கும். இரத்த அழுத்தம், இதயநோய் உள்ளவர்கள் அவரைக்காயை அதிகம் சேர்த்துக்கொள்வது நல்லது. காமச்சிந்தனை, அதீத சிந்தனை, கோபம், எரிச்சல், இவற்றைப் போக்கும். உடலுக்கும், மனதிற்கும் சாந்தத்தைக் கொடுக்க வல்லது.
நீரிழிவை குணமாக்கும்
சர்க்கரை நோய் உள்ளவர்கள் அவரைக்காயை அதிகம் சேர்த்துக்கொண்டால், நீரிழிவு நோயால் உண்டாகும் மயக்கம், தலைச்சுற்றல், கை, கால் மரத்துப்போதல் போன்றவை கட்டுப்படும்.
மலச்சிக்கலைப் போக்கும், வயிற்றுப் பொருமலை நீக்கும். மூலநோய் தாக்கம் உள்ளவர்கள் அவரைக்காயை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்வது நல்லது. சிறுநீரைப் பெருக்கும். சளி, இருமலைப் போக்கும்
சரும நோய்களை குணமாக்கும்
முதுமையில் உண்டாகும் நோயின் தன்மையை அவரைப் பிஞ்சு மாற்றும். தசை நார்களை வலுப்படுத்தும். உடலுக்கு நோய் எதிர்ப்புச் சக்தியைக் கொடுக்கும். சருமத்தில் உண்டாகும் பாதிப்புகளைக் குறைக்கும். இரவு உணவில் அவரைக்காய் சேர்த்துக் கொண்டால் சுகமான நித்திரை கிடைக்கும்.
முற்றிய அவரைக்காயை உணவாக சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அதற்குப் பதிலாக முற்றிய அவரைக்காய், முற்றிய வெண்டைக்காய் போன்றவற்றை சேர்த்து சூப் செய்து அருந்தினால் உடல் பலமடையும். ஆண்மை சக்தி அதிகரிக்கும். நினைவாற்றலைத் தூண்டும்.
அதிக ஊட்டச்சத்து:
அவரைக்காயில் வைட்டமின் பி1, இரும்புச்சத்து, காப்பர், பாஸ்பரஸ், பொட்டாசியம், மெக்னீசியம், ஃபோலியேட், மாங்கனீசு என்று பல்வேறு சத்துக்கள் அடங்கியுள்ளன. இந்தச் சத்துக்களால் சீரான இரத்த ஓட்டம் முதல் எலும்புகள் வலுவாவது வரை பல நன்மைகள் நமக்குக் கிடைக்கின்றன.
மன அழுத்தம் போக்க:
அவரைக்காயின் சுவையே தனி. அதில் அதிகமாக உள்ள எல்-டோப்பா என்ற அமினோ அமிலம்தான் அந்தத் தனி சுவையைக் கொடுக்கிறது. அந்த அட்டகாசமான சுவை நமக்கு சந்தோஷத்தைக் கொடுத்து, மன அழுத்தங்களைப் போக்குகிறது.
பசியைப் போக்கும்:
அவரைக்காயில் கலோரிகளை எரிக்கும் சக்தி அதிகம் உள்ளது. மேலும் அதில் உள்ள புரதச்சத்தும் சேர்வதால், இந்த உணவைச் சாப்பிடும் போது நம் வயிறு நிறைந்த உணர்வு நமக்குக் கிடைக்கும்.
நோயெதிர்ப்பு சக்தியை பெருக்க:
அவரையில் வைட்டமின் சி அதிகம் உள்ளதால் புற்றுநோய் உள்ளிட்ட நோய்கள் நம்மை அண்டாது. வேறு சில நோய்களிலிருந்தும் பாதுகாக்கிறது.
சங்குலுண விற்குங் கற்கும் உறைகளுக்கும்
பொங்குதிரி தோடத்தோர் புண்சுரத்தோர்-தங்களுக்குங்
கண்முதிரைப் பில்லநோய்க் காரருக்குங் காழுறையா
வெண்முதிரைப் பிஞ்சாம் விதிஎன்று அவரைக்காய் பற்றி நூற்றாண்டுகளுக்கு முன்பே தேரையர் குணபாடத்தில் கூறப்பட்டுள்ளது


அவரைக்காய் கூட்டு



  • அவரைக்காய் - 100 கிராம்
  • தக்காளி - ஒன்று
  • பச்சை மிளகாய் - 3
  • கடலைப் பருப்பு - கால் கப் + ஒரு மேசைக்கரண்டி
  • பெரிய வெங்காயம் - ஒன்று
  • தேங்காய் துருவல் - 2 மேசைக்கரண்டி
  • சோம்பு - அரை தேக்கரண்டி
  • கல் உப்பு - ஒன்றேகால் தேக்கரண்டி
  • உளுத்தம் பருப்பு - அரை தேக்கரண்டி
  • கறிவேப்பிலை - ஒரு கொத்து
  • எண்ணெய் - ஒரு மேசைக்கராண்டி
  • மிளகாய் தூள் - ஒன்றரை மேசைக்கரண்டி

அவரைக்காய் மற்றும் பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். தக்காளியை துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாயை இரண்டாக கீறி வைக்கவும். தேங்காயை துருவி வைத்துக் கொள்ளவும்.
குக்கரில் கடலைப்பருப்பைப் போட்டு பருப்பு மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி 2 விசில் வரும் வரை வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்.
மிக்ஸியில் தேங்காய் துருவலுடன் சோம்பு சேர்த்து 3 மேசைக்கரண்டி தண்ணீர் ஊற்றி விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
பருப்பு வெந்ததும் குக்கரை திறந்து அவரைக்காய், பச்சை மிளகாய், தக்காளி, மிளகாய் தூள், முக்கால் அளவு நறுக்கிய வெங்காயம் மற்றும் உப்பு போட்டு ஒரு கப் தண்ணீர் ஊற்றவும். மீதியுள்ள வெங்காயத்தை தாளிப்பதற்கு எடுத்து வைக்கவும்.
குக்கரை மூடி வெய்ட் போட்டு 2 விசில் வரும் வரை வேக வைக்கவும். பருப்பு நன்கு வெந்திருப்பதால் அதிக நேரம் வேகவைக்கத் தேவையில்லை. காய்கள் வெந்தால் மட்டும் போதும்.
காய்கள் வெந்ததும் 5 நிமிடங்கள் கழித்து திறந்து தேங்காய் சோம்பு விழுதை ஊற்றி கிளறி 2 நிமிடங்கள் கொதிக்க வைத்து இறக்கிவிடவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு தாளித்து, வெங்காயம், கறிவேப்பிலை போட்டு ஒரு நிமிடம் வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் அதை எடுத்து கூட்டில் கொட்டி நன்கு கிளறிவிடவும்.
சுவையான அவரைக்காய் கூட்டு தயார். இதை சாதத்துடன் சேர்த்து சாப்பிடலாம். அல்லது புளிக்குழம்பு, வற்றல் குழம்பு ஆகியவற்றுடன் சாப்பிடலாம்.
அறுசுவை நேயர்களுக்காக இந்த அவரைக்காய் கூட்டு குறிப்பினை வழங்கி செய்து காட்டியவர் திருமதி. சுமதி திருநாவுக்கரசு . சமையல் கலையில் நீண்ட அனுபவமும், நிறைய ஆர்வமும் கொண்ட இல்லத்தரசி இவர். ஏராளமான சமையல் போட்டிகளில் பங்கேற்று பரிசுகள் பல பெற்றுள்ளார்.

No comments:

Post a Comment